செய்திகள் :

ஜேக் பிரேசர் மெக்கர்க் விலகல்..! வங்கதேச வீரர் சேர்ப்பு!

post image

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கருக்குப் பதிலாக முஸ்தபிசூர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதாகும் வங்கதேச இடதுகை வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் டி20 போட்டிகளில் 351 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

பாகிஸ்தானுடனான மோதலினால் ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது, ஐபிஎல் போட்டிகள் மீண்டும் மே.17ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் பிரேசர் மெக்கர்க் தில்லி அணிக்காக இந்த சீசனில் 5 போட்டிகளில் 55 ரன்களை மட்டுமே எடுத்தார்.

மிட்செல் ஸ்டார்க் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு முக்கியமான பங்கு வகிக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முன்னிட்டு ஸ்டார்க் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதால் அவரில்லாத இடத்தை நிரப்ப முஸ்தபிசூர் ரஹ்மான் பயன்படுவாரென தில்லி கேபிடல்ஸ் அணி முடிவெடுத்துள்ளது.

முஸ்தபிசூர் ரஹ்மான் சிஎஸ்கே அணியிலும் நன்றாக விளையாடி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தார்.

2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான முஸ்தபிசூர் ரஹ்மான் கடந்த சீசன்களில் தில்லி அணிக்காக 2022, 2023இல் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 38 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பந்துவீச்சில் எகானமி 7.84ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் தில்லி அணி 5-ஆவது இடத்தில் இருக்கிறது. பிளே ஆஃப்-க்கு செல்ல அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் தில்லி அணி இருக்கிறது.

தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் புதிய விதியை அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட... மேலும் பார்க்க

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் டெவால்டு பிரீவிஸ்..! ரசிகர்கள் உற்சாகம்!

இளம் சிஎஸ்கே வீரர் டெவால்டு பிரீவிஸ் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதாகக் கூறியுள்ளார்.தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இருப்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட... மேலும் பார்க்க

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17 தொடங்கும்: பிசிசிஐ

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று(மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்க... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! தில்லி அணிக்கு பெரும் பின்னடைவா?

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்றாலும் தில்லி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்திருப்பது தில்லி அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கி... மேலும் பார்க்க