UK: புதிய விசா நடைமுறைகள்; கடினமாகும் லண்டன் கனவு.. இந்தியர்களுக்கு வரும் பாதிப்...
ராமின் பறந்து போ வெளியீட்டுத் தேதி!
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தை இயக்கினார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று வரும் அப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ராம் பறந்து போ என்கிற திரைப்படத்தையும் இயக்கினார். இதில், நடிகர் சிவா மற்றும் குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: அமீர் கானின் ‘சித்தாரே சமீன் பார்’ டிரைலர்!
இந்த நிலையில், பறந்து போ திரைப்படம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.