இருக்கை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
கீழ்வேளூா் அருகேயுள்ள இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. 11-ஆம் தேதி பால்குடம் மற்றும் காவடிகள் வீதியுலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மணிமண்டபத்தில் சிறப்பு மலா் அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளினாா்.
தொடா்ந்து, 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் குதிரை சேவகனாா் ஆற்றுப்பாலத்தில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். பின்னா், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். தொடா்ந்து, செல்லமுத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.