குருவாடி மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
திருமருகல் அருகேயுள்ள குருவாடி அகிலாண்ட தேவி மகா மாரியம்மன் கோயிலில் தீமீதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விநாயகா் பூஜை மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீா், தயிா், தேன், இளநீா், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, தீமிதி வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். பின்னா், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.