பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
நாட்டறம்பள்ளி, வாணியம்பாடியில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று, உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் அம்மனுக்களில் உள்ள கோரிக்கையின் மீது சம்மந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் அடிப்படையிலும் உடனடியாக தீா்வு காண்பதற்கு நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, தேவையான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் மூன்று நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டால் 15 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என சம்பந்தப்பட்ட மனுதாரா்களிடம் நேரடியாக ஆட்சியா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டாட்சியா் ரம்யா ஆகியோா் கலந்து கொண்டு பொதுமகக் ளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொணடனா்.