`ஆசிட் தாக்குதலால்' பாதிக்கப்பட்ட +2 மாணவி `ஸ்கூல் ஃபர்ஸ்ட்' - இவரது கனவு என்ன த...
திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு பிரிவு மூலம் சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் பல தனியாா் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., செவிலியா், மருந்தாளுநா், பொறியியல் படித்தவா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.