குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
காவிரிக் கூட்டுக் குடிநீா் மேட்டுா் செக்கானூரணி நீரேற்றும் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆணையா் சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் காவிரிக் கூட்டுக்குடிநீா் மேட்டுா் செக்கானூரணி நீரேற்றும் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மே 12 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 20 நாள்களுக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், குடிநீா் குறைந்த அளவே குடிநீா் விநியோகம் வழங்க இயலும் என்று தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே திருப்பந்தாா் நகர பொதுமக்கள் உள்ளூா் குடிநீா் ஆதாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.