செய்திகள் :

Kamal: ``எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தது இவைதான்; என்னை மாற்றியது மலையாள சினிமாதான்'' -நடிகர் கமல்

post image

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' வருகிற ஜூன் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட திரைப்பட்டாளங்களின் நடிப்பு என இப்படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் வெளியீட்டையொட்டி படக்குழு புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அவ்வகையில் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில் தனது சினிமா அனுபவம் குறித்துப் பல விஷியங்களைப் பேசியிருக்கிறார்,

Thug Life

இதில் மலையாள சினிமா குறித்துப் பேசியிருக்கும் கமல், "என்னோட ஆரம்ப காலங்களில் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ஒரே மாதிரி, எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறோம் என்கிற சலிப்பான மனநிலை இருந்தது.

சரி, நிறையக் கற்றுக் கொள்ளலாம் என்று மலையாளம் சினிமாவிற்குச் சென்றேன். அங்கு சினிமா குறித்த எனது பார்வை, நடிப்பு எல்லாமும் மாறியது. அது எனக்கு ஒரு நல்ல பயிற்சிக் காலமாக இருந்தது. என்னுடைய குருநாதர் இயக்குநர் பாலச்சந்தர், மலையாளம் சினிமா இரண்டும்தான் எனக்கு சினிமாவைக் கற்றுக் கொடுத்தது. இன்று இருப்பவர்கள் எப்படி கூகுளில் கேட்டறிந்து கற்றுக் கொள்கிறார்களோ, நான் அப்படி பாலச்சந்தர், மலையாளம் இரண்டிலிருந்தும் கற்றுக் கொண்டேன்.

நடிகர் கமல்

மலையாள நடிகருடன் பணிபுரிந்தது எனது அணுகுமுறையை மாற்றியது, ஏனென்றால் மலையாளத்தில் பல யூசுப் சஹாப் (திலீப் குமார்) இருப்பதைக் கண்டேன்." என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Ravi Mohan: "கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்" - ரவி மோகன் அறிக்கை

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து ஆ... மேலும் பார்க்க

Kollywood: 2015 - 2025 வரை; முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்கள்!

‘ஒருவேளை ஜெயிக்கலைனா?, ஒருவேளை ஜெயிச்சுட்டா’ எனக் கேள்விகளுடன் நித்தம் போர் நடத்திக் கொண்டு நிராகரிப்பு, அவமானம், கைவிடாத நம்பிக்கை, வாழ்க்கையின் ஆடுபுலி ஆட்டங்களைக் கடந்து இயக்குநராக வேண்டும் எனச் சி... மேலும் பார்க்க

Vishal: "திருநங்கைகள் தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குப் போகணும்" - நடிகர் விஷால்

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகிப் போட... மேலும் பார்க்க

Thug Life: ரிலீஸ் எப்போது? - தயாரிப்பு நிறுவனங்கள் அறிக்கை!

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலால் நாட்டில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஐபிஎல் முதல் திரைப்படங்கள் வரை தள்ளி வைக்கப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. ... மேலும் பார்க்க

The Verdict: "அமெரிக்க நீதிமன்ற நடைமுறை வித்தியாசமானது; அதனால்தான்..." - இயக்குநர் கிருஷ்ண சங்கர்

வரலட்சுமி, சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் எனப் பலரும் நடித்திருக்கும் படம் 'தி வெர்டிக்ட்' . முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கியிருக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.... மேலும் பார்க்க