விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!
30 போட்டிகளில் 96 கோல்கள்..!பார்சிலோனா உருவாக்கும் இன்னொரு இளம் புயல்!
பார்சிலோனா அணி இளம் வீரர்களை உருவாக்குவதில் எப்போதும் முன்மாதிரியாக இருந்துவருகிறது.
பார்சிலோனா அணியில் லாமின் யமால் (17) என்ற இளம் வீரர் லா லீகா, சாம்பியன்ஸ் லீக்கில் இதற்கு முன்பாக லியோனல் மெஸ்ஸி என்ன செய்வாரோ அதேபோல நம்பமுடியாத வகையில் பந்தினை எதிரணியினரிடம் இருந்து ட்ரிபிள் செய்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில், யு-13 பார்சிலோனா அணியில் ஒரு சிறுவன் 30 போட்டிகளில் 96 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
12 வயதாகும் இந்தச் சிறுவனின் பெயர் ஃபோடே டையலோ. ஆப்ரிக்காவைச் சேர்ந்த இவன்தான் தற்போது உலக அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறான்.
ஃபார்வேர்டு பொசிஷனில் விளையாடும் ஃபோடே டையலோ இதுவரை பார்சிலோனாவில் யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறான்.
குறைந்தது ஒரு போட்டியில் 3 அல்லது 4 கோல்கள் அடிக்கிறார். ஏற்கனவே லாமின் யமால் 29 போட்டிகளில் 68 கோல்கள் அடித்திருந்தார்.
இந்தச் சிறுவனை லாமின் யாமலுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். லாமின் யமாலை மெஸ்ஸியுடன் ஒப்பிட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது.
டீ ஷர்ட் எண் 7-இல் விளையாடும் ஃபோடே டையலோ பல திறமைகள் உடைய அதிரடியான ஃபார்வேடு வீரராக இருக்கிறார். பொதுவாக நம்.9இல் விளையாடும் இவர் பல இடங்களிலும் விளையாடும் திறமை உள்ளவராக இருக்கிறார்.
பார்சிலோனா அணியில் ’சுறாவின் மனநிலை’ எனப்படும் பெர்ரன் டோரஸுடனும் இவரை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
சில போட்டிகளில் ஃபோடே டையலோவும் பெர்ரன் டோரஸின் பாணியில் கொண்டாடியிருக்கிறார்.
கினி பழங்குடியைச் சேர்ந்த இவருக்கு மூர்க்கமான டிஃபென்டர்களையும் தாண்டி கோல் அடிக்கும் ஆற்றல் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
சில ஆண்டுகளில் பார்சிலோனா சீனியர் அணியில் இடம்பிடிக்க தகுதிவாய்ந்தவராக இந்தச் சிறுவனை மாற்ற பயிற்சியாளர்கள் தீவிரமாக முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.