IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' - பட்லருக்கு ப...
ரேஷ்மா முரளிதரனின் தங்க மீன்கள் தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!
சின்ன திரை நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் தங்க மீன்கள் தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தொடர், சன் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூவே பூச்சூடவா, கிழக்கு வாசல் உள்ளிட்டத் தொடர்களை அடுத்து தங்க மீன்கள் என்ற தொடரில் ரேஷ்மா நடிக்கவுள்ளார். சுந்தரி தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஜிஷ்ணு மேனன் இத்தொடரில் நாயகனாக நடிக்கிறார்.
தங்க மீன்கள் தொடரில் இவர்களுடன் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்த அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முன்னதாக இத்தொடருக்கு செல்லமே எனப் பெயரிடப்பட்டிருந்தது. எனினும், ராதிகா நடிப்பில் அந்த பெயரில் முன்பே தொடர் ஒளிபரப்பானதால், பிறகு தங்க மீன்கள் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அடுத்தடுத்து நாயகியாகும் ரேஷ்மா
சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரேஷ்மா, சமீபத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தங்க மீன்கள் தொடரிலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் நடிக்கும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவதால், சமூக வலைதளங்களில் ரேஷ்மாவுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்புத் திறமையால் பாத்திரத்துக்கு வலு சேர்க்கும் ரேஷ்மாவின் புதிய தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.