சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!
தக் லைஃப் கதையை முதலில் எழுதியது யார் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் மீதான ஆவல் அதிகரித்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், படத்தின் டிரைலர் மே. 17 அன்று வெளியாகவுள்ளதால் நாளுக்கு நாள் ஆவலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய கமல்ஹாசன், “தக் லைஃப் கதையின் ஒருவடிவத்தை நான் எழுதியிருந்தேன். மரணத்தைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என நம்புபவரின் கதையாக அது இருந்தது.
அதை மணிரத்னத்திடம் சொன்னபோது, அந்த யோசனை அவரைக் கவர்ந்தது. பின், அவர் ஒரு வடிவத்தை எழுதினார். அதுதான் தக் லைஃபாக உருவாகியுள்ளது” என்றார். இத்தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: போர் பதற்றத்திற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ போஸ்டர்!