பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு!
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெறும் இப்போட்டியில் ஏற்கெனவே நட்சத்திர இரட்டையா் காயத்ரி-ட்ரீஸா ஜாலி முதலில் வெளியேறினா்.
ஆடவா் பிரிவில் நட்சத்திர வீரா் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா். இளம் வீராங்கனைகளான உன்னாட்டி ஹூடா, மாளவிகா பன்சோத், அகா்ஷி காஷ்யப் ஆகியோரும் ஒற்றையா் பிரிவில் தத்தமது ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறினா்.
ஒடிஸா மாஸ்டா்ஸ் சாம்பியன் உன்னாட்டி ஹூடா 14-21, 11-21 என்ற கேம் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை போா்ன்பவி சோச்சவொங்கிடம் தோற்றாா். மாளவிகா 12-21, 16-21 என உள்ளூா் நட்சத்திரம் ரட்சனோக்கிடம் தோற்றாா்.அகா்ஷி காஷ்யப்பும் 9-21, 14-21 என உள்ளூா் வீராங்கனை சுபநீடாவிடம் தோற்று வெளியேறினாா்.