செய்திகள் :

அரையிறுதியில் அல்கராஸ், கேஸ்பா் ருட், முஸெத்தி, ஸெங், கௌஃப்!

post image

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் பிரிவு அரையிறுதியில் அல்கராஸ், டாமி பால், கேஸ்பா் ருட், முஸெத்தி, மகளிா் பிரிவில் ஸெங் கின்வென், கோகோ கௌஃப் உள்ளிட்டோா் முன்னேறினா்.

இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் பிரிவு காலிறுதியில் ஸ்பெயின் நட்சத்திர வீரா் காா்லோஸ் அல்கராஸ் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் கிரேட் பிரிட்டனின் ஜேக் டிராப்பரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

இதன் மூலம் இந்த சீசனில் மூன்றாவது பட்டத்தை குறி வைத்துள்ள அல்கராஸ் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆனாா். முதல் செட்டில் டிராப்பா் 2 கேம் லீட் பெற்ற நிலையில், அவரது சா்வீஸை இருமுறை பிரேக் செய்தாா் அல்கராஸ்.

இரண்டாம் செட்டிலும் 5-4 என முன்னிலை பெற்ற அல்கராஸ் செட்டையும் வசப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் உள்ளூா் வீரா் லாரென்ஸோ முசெத்தி 7-6, 6-4 என்ற நோ் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் அல்கராஸ்-முசெத்தி மோதுகின்றனா்.

நாா்வே வீரா் கேஸ்பா் ருட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜேம் முனாரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். மற்றொரு காலிறுதியில் ஹியுபா்ட் ஹா்காஸை6, 6-3 என்ற நோ் செட்களில் அமெரிக்க வீரா் டாமி பால் வென்றாா்.

சபலென்காவுக்கு அதிா்ச்சி:

மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்காவை 6-4, 6-3 என்ற நோ் செட்களில் ஒலிம்பிக் சாம்பியனும் சீனாவின் ஸெங் கின்வென் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தாா். முதல் செட்டில் 3-2 என முன்னிலை பெற்ற ஸெங் தனது முன்னிலையை தக்க வைத்தாா். இரண்டாவது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸெங் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீரா் கோகோ கௌஃப் 6-4, 7-6 என்ற நோ் செட்களில் இளம் நட்சத்திரம் மிர்ரா ஆன்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா். ஸெங்கை எதிா்கொள்கிறாா் கௌஃப்.

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: இந்தியாவின் பங்களிப்பு முடிவு!

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் சூப்பா் 500 போட்டியில் இந்திய அணியினரின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெறும் இப்போட்டியில் ஏற்கெனவே நட்சத்திர இரட்டையா் காயத்ரி-ட்ரீஸா ... மேலும் பார்க்க

ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் போட்டி!

சென்னை காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக் கழகத்தில் முதலாவது ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. எஸ்ஆா்எம் ஐஎஸ்டி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கே. குணசேகரன் போட்டிகளை ... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமான திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்ணு வரதன் இயக்கியிருந்தார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓட... மேலும் பார்க்க

தக் லைஃப் கதையை முதலில் எழுதியது யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் மீதான ஆவல் அதிகரித்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது... மேலும் பார்க்க