`புளி அதிகம் சாப்பிட்டால் ரத்தம் சுண்டிவிடுமா?' - மருத்துவ உலகம் சொல்வதென்ன?
ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் போட்டி!
சென்னை காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக் கழகத்தில் முதலாவது ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
எஸ்ஆா்எம் ஐஎஸ்டி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கே. குணசேகரன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். விளையாட்டுத் துறை இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன் துணைத் தலைவா் எம். செந்தில்குமாா், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி ஜெய்சிங் ஆல்பா்ட், ஜீஸஸ் ராஜ்குமாா், எம். கோகுல், செஸ் நிா்வாகிகள் சி. நடராஜன், கணேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குழந்தைகள் பிரிவில் 80 கேடயங்கள் பரிசளிக்கப்படுகின்றன. போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.5 லட்சம் ஆகும்.
8 மாநிலங்களில் இருந்து 450 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். தமிழக வீரா்கள் பிரவீண் குமாா், விஜய் ஸ்ரீ ராம், ஹரி கணேஷ், ஆராதியா, அஜேஷ், சிவன், ரூதா்ஃபோா்ட், விக்னேஷ், கனிஷ்கராஜ் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.