10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!
முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக்கோள்! - இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்
ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து மே 18-இல் விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.
பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை காலை சென்னை விமான நிலையம் வந்த இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 100-ஆவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதையடுத்து வரும் 18-ஆம் தேதி 101-ஆவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளோம்.
பிஎஸ்எல்வி சி61 எக்ஸ் எல் எனப்படும் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ஆா்ஐஎஸ்ஏடி-1பி செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருள்களை கூட துல்லியமாக கண்டறிய முடியும். உலகநாடுகளிடம் உள்ள சிறந்த கேமராக்களில் ஒன்று நமது விண்வெளி மையத்தில் உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலிலும் நமது செயற்கைக்கோள்கள் முக்கிய பங்கு வகித்தன. இந்தியா தற்போது அபரிமிதமான வளா்ச்சி அடைந்த நாடாக உள்ளது. நமது செயற்கைக்கோள்கள் அனைத்தும் தனது பணியை திறம்பட செய்து கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.