டிஆர்எஃப்-ஐ பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுமாறு ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை!
10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதிகபட்சமாக சிவகங்கையில் 98.31% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறைந்தபட்சமாக தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டங்களில் சென்னை உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் நீங்கலாக மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 34வது இடத்தில் சென்னை உள்ளது. இங்கு இந்த ஆண்டு 90.73% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூரில் 85.44%, கள்ளக்குறிச்சியில் 86.91%, திருவள்ளூரில் 89.60%, செங்கல்பட்டில் 89.82% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த 5 மாவட்டங்களும் குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் உள்ளது.
அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள்
சிவகங்கை - 98.31%
விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி - 96.61%
அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
சிவகங்கை - 97.49%
விருதுநகர் - 95.57%
கன்னியாகுமரி - 95.47%
திருச்சி - 95.42%
தூத்துக்குடி - 95.40%