செய்திகள் :

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடாதீர்கள்: முன்னாள் ஆஸி. வீரர்

post image

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை தவறவிடும் கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர்கள்!

மிட்செல் ஜான்சன் வலியுறுத்தல்

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது தொடர்பான முடிவை தனிப்பட்ட வீரர்களிடமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விட்டுவிட்டது. வீரர்கள் எடுக்கும் முடிவு என்பது மிகவும் முக்கியம். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் நிறைய பணம் ஈட்ட முடிந்தாலும், அது வெறும் போட்டியே. இந்த மாதிரியான சூழலில் முடிவெடுக்கும் இடத்தில் நான் இருந்தால் எனது முடிவு மிகவும் எளிமையானது. மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக நான் மீண்டும் செல்ல மாட்டேன். காசோலைகளைக் காட்டிலும் உயிர் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டேன் எனக் கூறுவது என்னுடைய தனிப்பட்ட கருத்தே. இதனால், வீரர்கள் யாரும் தங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.

இதையும் படிக்க: மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார்..! தில்லிக்கு பின்னடைவா?

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் தொடரின் நாளைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள போட்டிகளுக்கான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை: கேகேஆர் வீரர்

ஐபிஎல் மீண்டும் தொடங்கும் எனத் தெரிந்ததால் நாங்கள் பயிற்சியை ஒருபோதும் நிறுத்தவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபி... மேலும் பார்க்க

திருப்பதியில் ஐபிஎல் அணியின் உரிமையாளர் வழிபாடு!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோ... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்த... மேலும் பார்க்க

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார்..! தில்லிக்கு பின்னடைவா?

தில்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல்ஸ் ஸ்டார்க் ஐபிஎல் போட... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை தவறவிடும் கேகேஆர் அணியின் ஆல்ரவுண்டர்கள்!

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வ... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைந்த வெளிநாட்டு வீரர்கள்!

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொட... மேலும் பார்க்க