ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல...
25-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட புதுக்கோட்டை: 93.53% தேர்ச்சி!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 335. இவற்றில் 21,646 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 10,809 பேர் மாணவர்கள், 10,837 பேர் மாணவிகள். தேர்வு முடிவுகளின்படி 9,898 மாணவர்களும், 10,348 மாணவிகளும் என மொத்தம் 20,246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.53 சதவிகிதமாகும்.
கடந்த 2023-24ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் 91.84 சதவிகிதத் தேர்ச்சி பெற்று, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 23ஆவது இடத்திலிருந்தது, தற்போது, 1.69 சதவிகிதம் கூடுதலாகத் தேர்ச்சி சதவிகிதம் எடுத்தும், மாநில தரவரிசைப் பட்டியலில் 25ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
100 சதவிகிதத் தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 335 பள்ளிகளில், 111 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 43 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.
நூற்றுக்கு நூறு...
புதுக்கோட்டை மாவட்டத்தில், 366 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்திலும், 275 மாணவர்கள் அறிவியல் பாடத்திலும், 24 மாணவர்கள் கணிதப் பாடத்திலும், 9 மாணவர்கள் ஆங்கிலப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.