`புளி அதிகம் சாப்பிட்டால் ரத்தம் சுண்டிவிடுமா?' - மருத்துவ உலகம் சொல்வதென்ன?
தகிக்கும் வெயிலால் வெறிச்சோடியது கடைவீதி; வியாபாரமில்லாததால் வியாபாரிகள் கவலை
கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தகித்த வெயிலால் கடைவீதிகள் வெறிச்சோடின. வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்தனா்.
கடுமையான கோடை வெயில் காரணமாக நாள்தோறும் கந்தா்வகோட்டைக்கு வந்து செல்லும் சுற்று வட்டார கிராம பகுதி பொதுமக்களின் வருகை குறைந்துள்ளது.
இதனால், வா்த்தகம் இன்றி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்படுவதால், வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் கவலையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனா். மேலும், மழையை இப்பகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.