செய்திகள் :

ஒருநாள் சுற்றுலா பயண திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம்: சுற்றுலாத் துறை!

post image

சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான ஒருநாள் சுற்றுலா பயணத் திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம் என தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடைகாலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் மற்றும் சொகுசு கப்பல் தொகுப்புடனான சுற்றுலா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளில் 1 மணி நேரம் சவாரி மற்றும் ஞாயிற்றுகிழமை ஒன்றரை மணி நேரம் சவாரி செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி படகு சவரி செய்யவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தொலைபேசி: 1800 425 1111, 044-2533 3333, 044-2533 3444 மற்றும் வாட்ஸ்ஆப் 75500 63121 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: விழுப்புரத்தில் 95.09 % தேர்ச்சி

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 95.09% தேர்ச்சியுடன் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 362 பள்ளிகளைச் சேர்ந்த 12, 104 மாணவர்கள், 11,612 மாணவிகள்... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த ஏப். 12-ஆம் தேதி முதல்முறையாக சவரன் ரூ. 70,160-க்கு விற்... மேலும் பார்க்க

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக - முழு விவரம்!

பிளஸ் 1 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரியலூர் - 97.76%ஈரோடு - 96.97%விருதுநகர் - 96.23%கோயம்பத்தூர் - 95.77%தூத்துக்குடி - 95.07%அரசுப் பள்ளிகள... மேலும் பார்க்க

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது?

10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம்... மேலும் பார்க்க

திட்டமிட்டப்படி ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

திட்டமிட்டப்படி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை முதலிடம்!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்... மேலும் பார்க்க