செய்திகள் :

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த ஏப். 12-ஆம் தேதி முதல்முறையாக சவரன் ரூ. 70,160-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை மே 8-இல் சவரன் ரூ. 73,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 920 குறைந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.

இதற்கிடையே அமெரிக்கா - சீனா இடையே பரஸ்பர வரி விதிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தை சுமுகமான முடிவை எட்டியுள்ளதால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றம் தணிந்துள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் பதிலாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியதால், சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தது.

இச்சூழல் இந்தியாவிலும் பிரதிபலிக்கும் பட்சத்தில், சென்னையில் தங்கம் விலை மே 12-இல் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,360 குறைந்து ரூ. 70,000-க்கும், மே 13-இல் சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ. 70,840-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து மே 14-ஆம் தேதி சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,560 குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ. 195 குறைந்து ரூ. 8,610-க்கும், சவரனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று(மே 16) மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 110 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 69,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! 92.09% தேர்ச்சி!

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், 6 மத்திய சிறைகளில் 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இனறு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் பார்க்க

'2026 மட்டுமல்ல 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொ... மேலும் பார்க்க

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு: 17-ஆவது இடத்தைப் பிடித்த திருப்பூர்!

திருப்பூர்: 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 94.84 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 17-ஆவது இடத்தைத் திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வ... மேலும் பார்க்க

தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்ய வாய்ப்பு!

தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தகவல் தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பருவக்காற்று என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இன்றியம... மேலும் பார்க்க