செய்திகள் :

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: விழுப்புரத்தில் 95.09 % தேர்ச்சி

post image

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 95.09% தேர்ச்சியுடன் 15-ஆவது இடத்தைப் பிடித்தது.

இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 362 பள்ளிகளைச் சேர்ந்த 12, 104 மாணவர்கள், 11,612 மாணவிகள் என மொத்தமாக 23,716 பேர் தேர்வெழுதினர்.

இதில் 11,394 மாணவர்கள், 11,158 மாணவிகள் என மொத்தமாக 22, 552 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.09 சதவீதமாகவும் உள்ளது.

மாவட்டத்தில் 192 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

கடந்தாண்டு 94.11 சதவீத தேர்ச்சியுடன் 10- ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம் நிகழாண்டில் 0.98 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருந்தாலும், 95.09% தேர்ச்சியுடன் தரவரிசையில் 15-ஆவது இடத்துக்கு பின் தங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் 241 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 16, 189 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,242 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 94.15 சதவீதத் தேர்ச்சியாகும் கடந்தாண்டு 93.51% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 0.64 % கூடுதலாக தேர்ச்சி பெற்ற போதிலும் மாநில அளவில் 10- ஆவது இடத்துக்கு பின் தங்கியது. 110 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதையும் படிக்க | 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விவரம்!

'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

கடுங்கோடை காலம் இன்றுடன் முடிகிறது; இனி.. பிரதீப் ஜான்

சென்னை : கடுமையான கோடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மே... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறையில் சாதனை: 100% தேர்ச்சி!

கோவைமத்தியசிறையிலிருந்துஇந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 44 கைதிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதையடுத்து, கோவை மத்திய சிறையில் ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியான நிலையில், 6 மத்திய சிறைகளில் 100% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் இனறு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். மேலும் பார்க்க

'2026 மட்டுமல்ல 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்' - முதல்வர் மு.க. ஸ்டாலின்

2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொ... மேலும் பார்க்க