காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!
`கணவரின் திருமணம் மீறிய உறவு; மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது’- டெல்லி நீதிமன்றம்
கடந்த ஆண்டு டெல்லியில் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் குடும்பத்தினர் கொடுத்த புகாரில், 'எங்கள் பெண்ணின் கணவருக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் திருமணத்துக்கு மீறிய உறவு உள்ளது. எங்கள் மகள் அதை எதிர்த்து கேடத்தால் அடித்து உதைத்திருக்கிறார். தான் வாங்கிய வாகனத்துக்கு தவணை காட்டும்படியும் சித்திரவதை செய்திருக்கிறார். இதனால் அவள் தற்கொலை செய்தாள்" என்று புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை கேட்டு கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தார்கள். நீண்டநாள சிறையல் இருக்கும் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்
அவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா, ஜாமீன் அனுமதித்ததோடு தீர்ப்பில், "குற்றம்சாட்டப்பட்ட நபர் தன் மனைவியை தொடர்ந்து அடித்து உதைத்ததாகவும், அவர் வாங்கிய வாகனத்துக்கு தவணை கட்டச் சொல்லி மனைவியின் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப்பெண் உயிருடன் இருக்கும்போதே இந்த குற்றசசாட்டை எழுப்பி புகார் அளித்திருக்கலாமே. அதனால் அந்தக குற்றச்சாட்டுகள் மீது நம்பகத்தன்மை இல்லை.

தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது!
திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக குற்றம்சாட்டி சில வீடியோக்களை ஆதராமாக அளிக்கப்பட்டுள்ளது. அப்படி அதுபோன்ற திருமணம் மீறிய உறவு இருந்ததாக கருதினாலும், அந்த உறவை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவுகளின்படி தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது.
கணவரின் திருமணம் கடந்த உறவு மனைவியின் தற்கொலைக்கு தூண்டியதாகாது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த ஆண்டு மார்ச் முதல் சிறையில் இருக்கிறார். அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது தேவையில்லாதது. அது மட்டுமின்றி குற்றப்பத்திரிகையை பார்த்தால் வழக்கு விசாரணை விரைவில் முடிவடையும்போல் தெரியவில்லை. இவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். அதனால் 50 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமீனிலும், இரண்டு நபர்களின் உத்தரவாத்துடன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறேன்" என்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி தெரிவித்துள்ள கருத்துகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.