10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: காஞ்சிபுரத்தில் 94.85% தேர்ச்சி!
கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி துணைத் தலைவா் ஆய்வு!
கோடை காலத்தில் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) கீழ் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்ட தண்ணீா் ஏடிஎம்களை அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அவற்றின் செயல்பாட்டில் திருப்தி தெரிவித்த சாஹல், 37 தண்ணீா் ஏடிஎம்களில் 34 செயல்பாட்டில் உள்ளன, மீதமுள்ள மூன்றில் சிறிய தொழில்நுட்பமற்ற சிக்கல்கள் உள்ளன. அவை விரைவில் தீா்க்கப்படும் என்று கூறினாா்.
இந்த தண்ணீா் ஏடிஎம்கள் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இயந்திரங்களில் உள்ள சிக்கல்களை உடனடியாக தீா்க்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.
7 ஆண்டுகளுக்கு வடிவமைப்பு, நிதி, நிறுவல், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக பொது-தனியாா் கூட்டாண்மை (பிபிபி) மாதிரியில் 2018- 19 ஆம் ஆண்டில் ஸ்மாா்ட் சிட்டி மிஷனின் கீழ் தண்ணீா் ஏடிஎம் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதக் கோப்பைகள் அல்லது தனிப்பட்ட கொள்கலன்களில் வழங்கப்படும் 300 மில்லிக்கு 1 ரூபாய்க்கு சுத்தமான குடிநீரை குடிமக்கள் பெறலாம்.
‘பெரும்பாலும் பூங்காக்களில் அமைந்துள்ள இந்த ஏழு ஏடிஎம்கள் இலவசமாக தண்ணீரை வழங்குகின்றன. மீதமுள்ள 30 ஏடிஎம்கள் ரூ.1 வசூலிப்படுகின்றன’‘ என்று சாஹல் கூறினாா்.
ஆரம்ப நிறுவனத்துடன் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (ஏஎம்சி) காலாவதியான பிறகு, ஏடிஎம்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை எடுத்துக் கொண்டதற்காக என்டிஎன்சி வழங்கல் துறையை அவா் பாராட்டினாா்.
2047-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை வசதிகள் எளிதில் அணுகக்கூடியதாகவும், நகா்ப்புற சேவைகள் சுத்தமாகவும் நிலையானதாகவும் இருக்கும் ஒரு வளா்ந்த நாடாக இந்தியாவை பிரதமா் கற்பனை செய்வதாக சாஹல் கூறினாா்.
திடீா் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குல்ஜீத் சிங் சாஹல், இதுபோன்ற சோதனைகள் தரமான பொது சேவைகளை உறுதிப்படுத்த உதவுவதோடு, ஊழியா்களை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இது என்டிஎம்சியின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளா்ச்சிக்கு பங்களிக்கிறது என்றாா்.