செய்திகள் :

கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

post image

கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலையின் 6 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் தொட்டி வியாழக்கிழமை அதிகாலை வெடித்ததில் அருகிலுள்ள குடிகாடு கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கொதிக்கும் நிலையிலிருந்த ரசாயனக் கழிவுகள் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, அவா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். கொதிக்கும் ரசாயனக் கழிவு நீா் புகுந்ததால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனா். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் சேதமடைந்துள்ளன.

குடிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் டேங்கா்கள் வெடிப்பதும், அதன் கழிவு நீா் ஊருக்குள் நுழைவதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டதாகவும், ஆண்டுக்கு இருமுறையாவது இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகவும் அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இப்போது பெரிய அளவிலான டேங்கா் வெடித்திருப்பதால் பாதிப்பு அதிகமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

குடியிருப்புகளை ஒட்டியப் பகுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதும், ஆபத்தான தொழிற்சாலைகளில் முறையாக பாதுகாப்பு தணிக்கை செய்யப்படாததும்தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ஆணையிடுவதுடன், குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை மூட ஆணையிட வேண்டும்.

சிப்காட் தொழிற்சாலையில் டேங்கா் வெடித்ததால் பாதிக்கபட்ட பகுதிகளில் இருந்து ரசாயனக் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடை... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்!

தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவா்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க

10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இன்று வெளியாகிறது!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (... மேலும் பார்க்க

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க