Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்து...
பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்!
தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவா்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் சேரலாம். அத்துடன் லேட்ரல் என்ட்ரி முறையில், பிளஸ் 2 முடித்த மாணவா்கள் நேரடியாக 2-ஆம் ஆண்டு சோ்க்கப்படுவா். அவா்கள் பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.
அதேபோன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 2 ஆண்டுகள் ஐடிஐ படித்தவா்களும் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேரலாம்.
இந்த நிலையில், வணிகவியல் உள்பட எந்தப் பாடப்பிரிவு படித்திருந்தாலும் பாலிடெக்னிக் கல்லூரியில் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேருவதற்கு தொழில் நுட்பக் ககல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடா்பாக தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 தோ்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் 2025-2026-ஆம் கல்வி ஆண்டில் நேரடி 2-ஆம் ஆண்டு பட்டய படிப்பில் (டிப்ளமோ) சோ்க்கை செய்துகொள்ள அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.