பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! - சிவசேனை
மும்பை: பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பற்றி துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி வகிக்கும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி மேற்கண்ட வெகுமதியை அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதல்களை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு பயங்கரவாதிகளின் படங்களை வெளியிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் காவல்துறை அவர்களை கண்டுபிடிக்க உதவிகரமாக துப்பு அளித்தால் ரூ.20 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில், துப்பு அளிப்போருக்கு தங்களது தரப்பிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்குவதாக சிவசேனை அறிவித்துள்ளது.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மகாராஷ்டிரத்திலிருந்து அங்கு சுற்றுலா சென்றிருந்த 6 பேர் மரணமடைந்தனர். பஹல்காம் தக்குதலில் மொத்தம் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.