செய்திகள் :

வக்ஃப் சட்டம்: மே 20-ல் முழு நாளும் விசாரணை!

post image

வக்ஃப் சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை வருகிற மே 20 ஆம் தேதி முழு நாளும் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் வக்ஃப் சட்டத்தில் திருத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வக்ஃப் சட்டம் தொடர்பாக வருகிற மே 20 ஆம் தேதி முழு நாள் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறினர். அதற்குள் இரு தரப்பினரும் சுருக்கமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

வக்ஃப் உறுப்பினர்கள், வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களை பரிந்துரைத்தல், வக்ஃப் வாரியத்திற்கு கீழ் அரசு நிலத்தை அடையாளம் காணுதல் ஆகிய திருத்தங்களில் இடைக்கால உத்தரவு தேவையா என்பது குறித்து மே 20 ஆம் தேதி நீதிபதிகள் முடிவெடுக்க உள்ளனர்.

அதுவரை(மே 20) வக்ஃப் சட்டத்தில் திருத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!

இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி! - சிவசேனை

மும்பை: பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பற்றி துப்பு அளித்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று சிவசேனை(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) அறிவித்துள்ளது.மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவி வகிக்கும் அம்மா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே 15) தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையா... மேலும் பார்க்க

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தக் கோரிய டிரம்ப்!

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்ட... மேலும் பார்க்க

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக பதவியேற்றார் அஜய் குமார்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் பதவியேற்றுக்கொண்டார். மேலும் பார்க்க

குழாய் மூலம் எரிவாயு திட்டம் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்: ரேகா குப்தா

தில்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். துவாரகாவில் நடந்த விழாவில் தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார்... மேலும் பார்க்க