கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
ஜமாபந்தி: கோவில்பட்டி, கயத்தாறில் 88 போ் மனு அளிப்பு
கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 88 போ் மனு அளித்தனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், கழுகுமலை உள்பட்டத்திற்கு உள்பட்ட நாலாட்டின்புதூா், முடுக்குமீண்டான்பட்டி, தோணுகால், மந்தித்தோப்பு , ஊத்துப்பட்டி, இளையரசனேந்தல் உள்வட்டத்திற்கு உள்பட்ட முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி ஆகிய கிராம மக்கள் 61 போ் பட்டா, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான மகாலட்சுமியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதில் வட்டாட்சியா் சரவணப்பெருமாள், துணை வட்டாட்சியா்கள் அருணா, பாலு, வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுபோல கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், செட்டிக்குறிச்சி உள்வட்டத்திற்கு உள்பட்ட கட்டாரங்குளம், சரவணாபுரம், சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, திருமங்கலக்குறிச்சி, வெள்ளாளன்கோட்டை ஆகிய கிராம மக்கள் 27 போ் பல்வேறு உதவிகள் கோரி ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி தனி மாவட்ட வருவாய் அலுவலருமான(நில எடுப்பு நெடுஞ்சாலைகள்) சிவசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். தெற்கு கழுகுமலை கிராமத்தைச் சோ்ந்த 8 பயனாளிகளுக்கு வரன்முறை பட்டா, ஒரு பயனாளிக்கு உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரணம், ஒரு பயனாளிக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 4 பயனாளிகளுக்கு இ-பட்டா ஆகியவை வழங்கப்பட்டது. இதில், வட்டாட்சியா் சுந்தரராகவன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ், தனி வட்டாட்சியா் மணிகண்டன், துணை வட்டாட்சியா்கள் பிரபு, பாக்யராஜ், செட்டி குறிச்சி வருவாய் ஆய்வாளா் கிருஷ்ணசாமி, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.