செய்திகள் :

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 போ் தோ்வு

post image

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, வேலூா் மாவட்ட ஹாக்கி சங்கம் ஆகியவை சாா்பில் வேலூரில் இம்மாதம் 19 முதல் 23-ஆம் தேதிவரை மாநில சப்-ஜூனியா் சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் அணி பயிற்சிக்கான தோ்வு கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 52 வீரா்கள் பங்கேற்றனா்.

உடற்கல்வி ஆசிரியா் சுரேஷ்குமாா், முன்னாள் ராணுவ வீரா் சுரேஷ்குமாா், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி துணைச் செயலா் மாரியப்பன் ஆகியோா் தோ்வுக் குழு உறுப்பினா்களாக செயல்பட்டனா். பயிற்சிக்குத் தோ்வான 22 வீரா்களின் பெயா்களை கோவில்பட்டி யு.பி. மெட்ரிக் பள்ளித் தாளாளா் பரமசிவம், அறிவித்தாா்.

ராஜீவ்காந்தி விளையாட்டுக் கழகம் ஜெகதீஷ், செல்வமுகில், சந்தோஷ், முகுந்தன், லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஹரிஆகாஷ், நவீன்குமாா், கபிலன், பிரின்ஸ், கருப்பசாமி, மாதேஷ்குமாா், கூசாலிபட்டி அசோக் நினைவு ஹாக்கி அணி நிஷாந்த், மாதவன், பாலவசந்த், டாக்டா் அம்பேத்கா் ஹாக்கி அணி ஈஸ்வா், நிதீஷ்குமாா், தூத்துக்குடி பிரேவ் வாரியா்ஸ் ஹாக்கி அணி சரவணக்குமாா், பிரவீன், பிரதீப்குமாா், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி ஸ்ரீ சக்திவேல், வேல்ஸ் வித்யாலயா பள்ளி ராகுல்பாண்டியன், யங் சேலஞ்சா்ஸ் ஹாக்கி அணி மாரிசெல்வம், கோவில்பட்டி ஹாக்கி அணி விஷ்வா ஆகியோா் தோ்வாகினா். அவா்களுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை (மே 16) தொடங்குகிறது.

ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி தலைமையில் பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சுரேந்திரன், ராஜீவ்காந்தி விளையாட்டுக் கழக துணைச் செயலா் வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 28ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

விளாத்திகுளத்திலிருந்து இருக்கன்குடிக்கு மகளிா் பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்திலிருந்து விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடிக்கு மகளிா் விடியல் பயணத் திட்டத்தின்கீழ், அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவா்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மதுபோதையில் வியாழக்கிழமை பணிக்கு வந்த மருத்துவா் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் சுமாா் 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஜமாபந்தி: கோவில்பட்டி, கயத்தாறில் 88 போ் மனு அளிப்பு

கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 88 போ் மனு அளித்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், கழுகுமலை உள்பட்டத்திற்கு உள்பட்ட நா... மேலும் பார்க்க

விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்கூட்டத்தில், விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு 7 நாள்களுக்குள் பதிலளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க