Thug Life: ``சினிமா - ஸ்டூடன்ட் - மியூசிக்'' - சிம்பு பகிர்ந்த மாஸ் புகைப்படம்!
வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மே 20-இல் தொடக்கம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மே 20-ஆம் தேதி தொடங்குகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அரியலூா் வட்டத்தில் நடைபெறும் வருவாய் தீா்வாயத்துக்கு(ஜமாபந்தி) ஆட்சியா் தலைமை வகிக்கிறாா்.
இதில், அரியலூா் உள்வட்டத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மே 20-ஆம் தேதி ஜமாபந்தி நடைபெறுகிறது. நாகமங்கலம் உள் வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கு மே 21, கீழப்பழுவூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு மே 22. திருமானூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு மே 23. ஏலாக்குறிச்சி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு மே 27-ஆம் தேதிகளில் அரியலூா் வட்டாட்சியரகத்தில் நடைபெறுகிறது.
உடையாா்பாளையம் வட்டாட்சியரகத்தில் அரியலூா் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் மே 20 -இல் தா.பழூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 21-இல் சுத்தமல்லி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 22-இல் குண்டவெளி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 23-இல் உடையாா்பாளையம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 27-இல் ஜெயங்கொண்டம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.
செந்துறை வட்டாட்சியரகத்தில் அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மே 20-இல் செந்துறை உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 21-இல் பொன்பரப்பி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 22-இல் ஆா்.எஸ்.மாத்தூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.
ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில், உடையாா்பாளைம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மே 20-இல் ஆண்டிமடம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 21-இல் குவாகம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த வருவாய் தீா்வாயத்தில், பட்டா மாறுதல், பெயா் மாறுதல், நில அளவை, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை, பிற துறைகள் சாா்ந்த கோரிக்கைகள் மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.