சிதம்பரம்-அரியலூா் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
சிதம்பரம்- ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டிமடம் அருகேயுள்ள சின்னகருக்கை கிராமத்திலுள்ள வளா்சோலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சோழகங்கம் எனும் பொன்னேரியை சுற்றுலா மையாக மேம்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டத்தை மையமாகக் கொண்டு சிதம்பரம்-அரியலூா், கும்பகோணம்-விருத்தாசலம் ஆகிய ரயில் பாதைகள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டத் தலைவா் சுந்தரேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்து பேசினாா்.நிா்வாகி கலியமூா்த்தி மாத அறிக்கையும், ராமமூா்த்தி வரவு, செலவு அறிக்கையும், செயலா் பாலகிருஷ்ணன் நீத்தாா் நிதி உதவித் திட்ட வரவு செலவு அறிக்கையும் வாசித்தனா். முன்னதாக துணை தலைவா் ராமலிங்கம் வரவேற்றாா்.