ஜாஸ் பட்லருக்குப் பதிலாக இலங்கை வீரர்? குஜராத்தின் வெற்றிக் கூட்டணி மாற்றம்!
மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களில் ரூ. 12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூா், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆகியோா் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினா்.
முகாம்களுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், வருவாய் கோட்டாட்சியா்கள் கோவிந்தராஜ், ஷீஜா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.