முதல் மனைவிக்கு தெரியாமல் 2 ஆவது திருமணம் செய்தவா் கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
கீழகோவிந்தபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (46). கூலி தொழிலாளியான இவா், தனது மனைவி அனிதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த நிலையில், இவருக்கு தெரியாமல் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளாா்.
இதுகுறித்து முதல் மனைவி அனிதா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், பிரபுவை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.