கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
வன்கொடுமையால் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அரும்பாவூா் மற்றும் கை.களத்தூா் கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசுப் பணிக்கான ஆணையின் கீழ், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மோ. மணிகண்டன் என்பவா் கடந்த ஜன. 17-ஆம் தேதியும், அரும்பாவூரைச் சோ்ந்த செ. மோகன்குமாா் என்பவா் கடந்த ஆக. 22-ஆம் தேதியும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.
இதையடுத்து மணிகண்டன் மனைவி மீனாவுக்கு மாவட்ட வேளாண்மைத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையும், மோகன்குமாா் சகோதரா் பிரபாகரனுக்கு வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையும் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன், தாட்கோ பொது மேலாளா் க. கவியரசு ஆகியோா் உடனிருந்தனா்.