`புளி அதிகம் சாப்பிட்டால் ரத்தம் சுண்டிவிடுமா?' - மருத்துவ உலகம் சொல்வதென்ன?
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு
மதுரை காமராஜா்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட 45-ஆவது வாா்டு காமராஜபுரம் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதனிடம் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்ற அவா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆழ்துளைக் கிணறு, சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி அமைக்க ரூ.23 லட்சம் ஒதுக்கினாா்.
இதையடுத்து, அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, மோட்டாா் அறை, குடிநீா்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, உதவி ஆணையா் சாந்தி, மாமன்ற உறுப்பினா் சண்முகவள்ளி, உதவி செயற்பொறியாளா் மயிலேறி நாதன், உதவிப் பொறியாளா் சூசை, மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, அவைத் தலைவா் சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.