விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!
சோனி பிஎஸ் - 5 விற்பனை பாதிப்புக்கு ஜிடிஏ - 6 காரணமா?
சோனி நிறுவனத்தின் தயாரிப்பான பிளே ஸ்டேசன் 5, விற்பனையில் தன்னிறைவடைந்துள்ளது.
முந்தைய தயாரிப்பான பிளே ஸ்டேசன் 4 ஐ ஒப்பிடும்போது சிறப்பான விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பரப் பணிகளே விற்பனை அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் எனவும் சோனி குறிப்பிட்டுள்ளது.
எனினும், தற்போது சந்தையின் நிலைமை மாறிவருவதால், விற்பனையின் வேகத்தில் சற்று தளர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், விற்பனையின் அளவு குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சோனி நிறுவனம் மின்னணு துறையில் நம்பகத்தன்மை வாய்ந்த தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேசன் இணைய விளையாட்டுப் பிரியர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.
கடந்த 2020 பிப்ரவரியில் வெளியான பிஎஸ் 5, உலகம் முழுவதும் 77.8 மில்லியன் (7.7 கோடி) விற்பனையாகியுள்ளது.
எனினும் உற்பத்தி சவால்கள், வரி விதிப்பு தாக்கம், வரையறுக்கப்பட்ட முதல் தரப்பு கேம் வெளியீடு போன்றவை சமீபகாலங்களாக பிஎஸ் 5 விற்பனைக்குத் தடையாக அமைந்துள்ளன.
அதோடு மட்டுமின்று கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 (ஜிடிஏ -6) ரிலீஸ் தாமதமும், சோனி பிஎஸ் 5 விற்பனையை பாதிக்கலாம் என்று தொழில் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
சோனி நிறுவனம் தொடர்ந்து மென்பொருள் ஒத்துழைப்பு மற்றும் வன்பொருள் மேம்பாடுகளை அவ்வபோது அறிவித்துவந்தாலும், ஜிடிஏ -6 வெளியீடு தாமதமாகி வருவது விற்பனையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலமாற்ற இடைவெளியை சோனி கையாள்வதைப் பொருத்து நடப்பு காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப மதிப்பு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | விவோ வி50 எலைட் இன்று அறிமுகம்! விற்பனையில் முற்றிலும் புதுமை!