செய்திகள் :

Padai Thalaivan: `விஜயகாந்தின் கண்கள் அப்படியே...'- ரமணா 2 குறித்து அப்பேட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

post image

அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், வெங்கடேஷ், யாமினி சந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படைத்தலைவன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் அன்பு, சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது,

”ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் அவர்கள் செய்தார்கள்.

எல்லோரும் விஜயகாந்த் குறித்து பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாக கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது" என்று கூறியிருந்தார்.

மேலும் தனது திருமணத்தின் போது விஜயகாந்த் அங்கு வந்தபோது பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் அவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்தது குறித்தும் நினைவு கூர்ந்தார் ஏ.ஆர் முருகதாஸ்.

``விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களை கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்கு கிடைத்திருக்கிறார்.

விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்... கண்டிப்பாக ரமணா 2 படம் எடுக்கலாம்" என்று பேசியிருந்தார் இயக்கநர் ஏ ஆர் முருகதாஸ்.

படைத்தலைவன்: ”கேப்டனும் என் மகனும் இதை ஆசைப்பட்டுவிட்டார்கள், நிச்சயமாக..." - பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படைத்தலைவன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் அன்பு, சசிக்குமார், ஏ. ஆர் முருகதாஸ், கஸ்தூரி ரா... மேலும் பார்க்க

Padai Thalaivan: ”இந்தப் படம் அப்பா இருக்கும்போதே...” - படைத்தலைவன் குறித்து சண்முக பாண்டியன்

அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள படைத்தலைவன் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படைத்தலைவன் படத்தின் இசை வெள... மேலும் பார்க்க

'அரசியல்ல இருந்தா இருந்துட்டு போ செத்த பயலே..!' - கொதிக்கும் ஜி.பி.முத்து என்ன சொல்கிறார்?

வடிவேலு ஒரு படத்தில் 'கிணத்தைக் காணோம்' என புகார் தருவாரே, அந்த டைப்பில் தனது வீடு அருகே இருந்த 'தெருவைக் காணோம்' என போலீஸில் புகார் தந்திருகிறார்யு-டியூப்+ பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்துஎன்ன நடந்தது? ... மேலும் பார்க்க

Cannes 2025: குவியும் பிரபலங்கள், கவனம் பெரும் காசா - கேன்ஸ் விழாவின் எதிர்பார்ப்புகள்!

உலகில் புகழ்பெற்ற கேன்ஸ் (Cannes 2025) திரைப்படத் திருவிழா பிரான்ஸில் நேற்று தொடங்கி மே 24 (சனிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது. கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் உலகளாவிய சினிமா பிரபலங்கள் அணிவகுப்பும் தலைப்பு செ... மேலும் பார்க்க

`ரஜினிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்’ - 50 ஆண்டு திரைப்பயண விழாவுக்குத் தயாரான வேலூர் ரசிகர் மன்றம்

ரஜினிகாந்த்தின் திரைப்பயணம் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா எடுப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி... மேலும் பார்க்க

Tourist Family : `சிம்ரன் கிட்ட, அவங்களுக்கு டப்பிங் பேசினத சொன்னேன்’ - 'மங்கையர்க்கரசி' ஶ்ரீஜா ரவி

சமீபத்துல வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துல, சசிகுமார் - சிம்ரன் ஜோடியின் பக்கத்து வீட்டில் வசிக்கிற மங்கையர்க்கரசி கேரக்டர்ல ஒன்றிப்போய் நெகிழ்ச்சியா நடிச்சிருக்காங்க ஶ்ரீஜா ரவி. அந்தப் படத்துல நடிச... மேலும் பார்க்க