செய்திகள் :

'அரசியல்ல இருந்தா இருந்துட்டு போ செத்த பயலே..!' - கொதிக்கும் ஜி.பி.முத்து என்ன சொல்கிறார்?

post image

வடிவேலு ஒரு படத்தில் 'கிணத்தைக் காணோம்' என புகார் தருவாரே, அந்த டைப்பில் தனது வீடு அருகே இருந்த 'தெருவைக் காணோம்' என போலீஸில் புகார் தந்திருகிறார் யு-டியூப் + பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து

என்ன நடந்தது? அவரையே தொடர்பு கொண்டு பேசினோம்.

''அண்ணே உடன்குடி  பெருமாள்புரத்துல என்னுடைய் வீடு இருக்கு. நான் தம்பிங்க என கூட்டுக் குடும்பமா வாழ்ந்துட்டு வர்றோம். எங்க வீட்டுக்கு முன்னாடி உச்சி மாகாளி அம்மன் கோவில் ஒண்ணு இருக்கு. ஊர்க்கோவில். எங்க குடும்பமும் வரி கொடுக்குது.

கோவிலுக்கு ரெண்டு புறமும் பாதை இருக்கு. அந்தப் பாதைதான் எங்க வீட்டுல இருந்து தெருவுக்குப் போற பாதை. ரெண்டு பாதையில் ஒரு பாதைக்கு கீழத் தெருன்னுதான் பேரு. கொஞ்ச நாள் முன்னாடி பதிவுத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரும், தேசிய கட்சியில இருக்கிற ஒருவரும், இன்னும் சிலரும் சேர்ந்துகிட்டு கோவிலை விரிவாக்கம் செய்றோம்னு அந்தப் பாதையில் கட்டுமானத்தைத் தொடங்கினாங்க.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜி.பி.முத்து
வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜி.பி.முத்து

பாதை அடைக்கபட்டிடுச்சு..!

இவங்க கட்டுமானத்தால் 15 அடி அகலம் கொண்ட அந்தக் கீழத்தெரு 8 அடியாச் சுருங்கிடுச்சு. அதனால் என் வீட்டுல இருந்து வெளியில் வர்ற பாதையும் அடைக்கபட்டிடுச்சு.

பஞ்சாயத்துல போய் புகார் தந்தேன். அவங்க வந்து கட்டுமானத்தை நிறுத்தச் சொல்லிட்டாங்க. உடனே குறிப்பிட்ட அந்த ஆளுங்க அடியாட்களை அனுப்பி என் வீட்டுல இருக்கிறவங்களை மிரட்டத் தொடங்கினாங்க. நான் ஷூட்டிங் போயிட்டா வீட்டுல இருக்கிற பொம்பளைங்களை அசிங்கமாப்  பேசித் திட்டறது தொடர்ந்து நடக்குது. அதுவும் ஞாயித்துக் கிழமை ஆனா ஷெட்யூல் போட்டு ஒவ்வொரு வாரமும் வந்துடுறாங்க. 

அதனாலதான் கலெக்டர் ஆபீஸ் உடபட எல்லா இடத்துலயும் மனு கொடுத்தேன்.

இப்ப விசாரணையில கடைசியா அந்தக் கோவில் இருக்கிற இடமே புறம்போக்குனு சொல்லிட்டாங்க. நான் குறிப்பிட்ட அந்த பதிவுத்துறையில் வேலை பார்த்த பார்ட்டி போலி பத்திரங்கள் தயார் பண்ணி மோசடி செய்து இந்த இடங்களை அபகரிக்கப் பார்க்குறாங்க.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜி.பி.முத்து

அரசியல்ல இருக்கிற ஆள், இப்ப பிரச்னையை வேற ரூட்டுக்கு திருப்பி விடப் பார்க்கிறார். அதாவது நான் கோவிலுக்கு எதிரா செயல்படுறேன்னு கிளப்பி விடறார். அவர் பேச்சைக் கேக்க நாலு பேரு இருப்பாங்க இல்லையா., அவங்கதான் என் வீட்டை முற்றுகையிட்டது. 'செத்த பயலே அரசியல்ல இருந்துட்டு போ அதனால் எனக்கென்ன'ன்னு என் ஸ்டைல்ல வஞ்சு விட்டுட்டேன்' எனக் குமுறினார் முத்து.

மேலும் இந்த விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு செல்லவும் தயாராகி விட்டாராம் முத்து.

Cannes 2025: குவியும் பிரபலங்கள், கவனம் பெரும் காசா - கேன்ஸ் விழாவின் எதிர்பார்ப்புகள்!

உலகில் புகழ்பெற்ற கேன்ஸ் (Cannes 2025) திரைப்படத் திருவிழா பிரான்ஸில் நேற்று தொடங்கி மே 24 (சனிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது. கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் உலகளாவிய சினிமா பிரபலங்கள் அணிவகுப்பும் தலைப்பு செ... மேலும் பார்க்க

`ரஜினிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்’ - 50 ஆண்டு திரைப்பயண விழாவுக்குத் தயாரான வேலூர் ரசிகர் மன்றம்

ரஜினிகாந்த்தின் திரைப்பயணம் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா எடுப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி... மேலும் பார்க்க

Tourist Family : `சிம்ரன் கிட்ட, அவங்களுக்கு டப்பிங் பேசினத சொன்னேன்’ - 'மங்கையர்க்கரசி' ஶ்ரீஜா ரவி

சமீபத்துல வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துல, சசிகுமார் - சிம்ரன் ஜோடியின் பக்கத்து வீட்டில் வசிக்கிற மங்கையர்க்கரசி கேரக்டர்ல ஒன்றிப்போய் நெகிழ்ச்சியா நடிச்சிருக்காங்க ஶ்ரீஜா ரவி. அந்தப் படத்துல நடிச... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 02: `எனக்கு மரியாதை தெரியாதா? சினிமாவை விட்டே போயிடுறேன்’ - சுஜாதா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவ... மேலும் பார்க்க

சச்சின் : `வெளிநாடுகளிலும் செம ரீச்; அடுத்த ரீரிலீஸ்..!’ - அஜித் பட அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணு

சச்சின் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படம், தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி 20 ... மேலும் பார்க்க

Otha Rubai Tharen: ``அஜித் என்னை பார்த்ததும்.. மாறாத அந்த விஷயம்'' - நெகிழும் ஜான் பாபு மாஸ்டர்

நாட்டுப்புற பாட்டு' படம் ரிலீஸானப்போ பாடல்களும் நடனமும் எப்படி பெருசா பேசப்பட்டு எனர்ஜியைக் கொடுத்ததோ, அதே எனர்ஜியைத்தான் 'குட் பேட் அக்லி' படமும் கொடுத்திட்டிருக்கு. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ரச... மேலும் பார்க்க