செய்திகள் :

குரூப் 1 தேர்வு முடிவு: இறுதி பட்டியல் வெளியானது!

post image

குரூப் 1 தேர்வின் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இறுதி பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன.

அந்த வகையில், 2024- ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

துணை ஆட்சியா் 16, காவல் துணைக் கண்காணிப்பாளா் 23, வணிகவரி உதவி ஆணையா் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் 21, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகிய 90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 13-இல் நடைபெற்றது.

இந்தத் தோ்வில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த டிச. 10 முதல் டிச. 13-ஆம் தேதி வரை முதன்மைத் தோ்வு நடைபெற்றது.

முதன்மைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு கடந்த ஏப். 7 ஆம் தேதி முதல் ஏப். 9 ஆம் வரை நேர்காணல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது.

இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதி பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

மதுரையில் மழையால் வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

மதுரை: மதுரையில் இன்று(மே 15) கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மதுரை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. விமான ஓடுபாதையில் மழைநீர் வடியாததால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்துப் பாடப்பிரிவினரும் சேரலாம்!

இனிமேல் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள... மேலும் பார்க்க

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக

நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொ... மேலும் பார்க்க

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச... மேலும் பார்க்க