செய்திகள் :

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

post image

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகை தந்த மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினந்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை, மது பழக்கம், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அடிப்படை காரணம் மது பழக்கம்தான். தமிழ்நாடு அரசு குற்றச் சம்பவங்களை தடுக்க எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணம்" எனத் தெரிவித்தார்.

மேலும் "சென்னையில் நடைபெற்ற பேரணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் இன்று நடைபெறும் பேரணியில், கட்சிப் பாகுபாடு இன்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். பாஜக கொடி எங்கேயும் கட்ட மாட்டோம். தேசியக் கொடியேந்தி ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் பேரணி நடைபெறும்.

தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து பேசுவோம்.

மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் பதவி கொடுப்பார்கள்" என கூறினார்.

இதையும் படிக்க | வக்ஃப் சட்டம்: மே 20-ல் முழு நாளும் விசாரணை!

மதுரையில் மழையால் வானில் சுமார் 1 மணி நேரம் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!

மதுரை: மதுரையில் இன்று(மே 15) கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மதுரை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியிருந்தது. விமான ஓடுபாதையில் மழைநீர் வடியாததால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இந்த ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கை: அனைத்துப் பாடப்பிரிவினரும் சேரலாம்!

இனிமேல் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு முடிவு: இறுதி பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வின் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இறுதி பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியி... மேலும் பார்க்க

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக

நிச்சயமாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தவெக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைப் பொ... மேலும் பார்க்க

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க