30 போட்டிகளில் 96 கோல்கள்..!பார்சிலோனா உருவாக்கும் இன்னொரு இளம் புயல்!
ரூ.44 லட்சத்தில் மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை
மாதனூா் ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம், மிட்டாளம் ஊராட்சி மேல்கூா்மாபாளையம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களின் தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு ரூ.44 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
நியாய விலைக்கடையில் ஆய்வு ....
பின்னா், ரங்காபுரம் கிராமத்தில் இயங்கும் நியாய விலைக் கடைக்கு சென்ற எம்எல்ஏ அங்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, கோதுமை, சா்க்கரை ஆகியவற்றின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்தாா்.