செய்திகள் :

'3 தீவிரவாதிகள் சுட்டு கொலை'- இந்தியா - பாக். எல்லையில் என்ன நடக்கிறது? - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

post image

ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்னும் பரபரப்பாகி உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி என தொடர்ந்து அதிரடிகளை பார்த்து வருகிறது அந்த எல்லை.

அதன்படி, தற்போது, மூன்று தீவிரவாதிகளை வீழ்த்தியுள்ளது இந்திய ராணுவம்.

இது குறித்த இந்திய ராணுவத்தின் கூடுதல் பொது தகவல் இயக்குநரகத்தின் எக்ஸ் பதிவில், "ஜம்மு & காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த உளவுத்துறை அமைப்புகளின் தகவலின் படி, இந்திய ராணுவம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து மே 13, 2025 அன்று லஷ்கர்-இ-தொய்பா அல்லது தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்டை சேர்ந்த மூன்று பயங்கர தீவிரவாதிகளை கடுமையான போராட்டத்திற்கு பிறகு வீழ்த்தியுள்ளது.

இந்த ஆபரேஷன், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடத்தப்பட்டது ஆகும்.

அந்தப் பகுதியில் நடந்த சமீபத்திய தீவிரவாத செயல்களுக்கு பிறகு இவர்கள் மூவரும் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து AK தொடர் துப்பாக்கிகள், அதிக அளவிலான வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் வெற்றி அனைத்து பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பின் விளைவாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அதன் பணியில் இந்திய ராணுவம் அசைக்க முடியாததாக உள்ளது. அமைதியை சீர்குலைக்கும் ஒவ்வொரு முயற்சியும் தீர்க்கமான மற்றும் இடைவிடாத பலத்தால் எதிர்கொள்ளப்படும்" என்று பதிவிட்டுள்ளது.

இன்று காலை இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"சர்வதேச புலனாய்வு நிறுவனத்தின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் படி, மே 15, 2025 அன்று அவந்திபோராவின் டிரால், நாடர் என்ற இடத்தில் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆபரேஷன் ஒன்றை தொடங்கியது.

இந்தக் குழுவிற்கு சந்தேகத்திற்குரிய சில நடவடிக்கைகள் தெரிந்தது. மேலும் தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இன்னும் ஆபரேஷன் தொடர்ந்து வருகிறது".

இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் நாடர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆக, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளை அழிப்பதில் இந்திய ராணுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

`பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன!’ – புகழும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றதில் இருந்து, அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத்திட்டங... மேலும் பார்க்க

Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த ... மேலும் பார்க்க

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..."உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை; வெளியேற்றப்பட்ட மருத்துவர்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற... மேலும் பார்க்க

Sofiya Qureshi: `என்ன மாதிரியான கருத்து இது.. மன்னிப்பு கேளுங்கள்'- பாஜக அமைச்சரைக் கண்டித்த நீதிபதி

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் தாக்குதல்களையும் இந்தியா சாதூர்யம... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கவர்னர் கைலாஷ்நாதனை மாற்றச் சொன்னார் முதல்வர் ரங்கசாமி' – நாராயணசாமி சொல்வதென்ன ?

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``பஹல்காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கேட்டதற்கு பிரதமர் மோடி மௌனம் காக... மேலும் பார்க்க