NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' - அணிகள் இணைப்பில் பின...
மணல் கடத்திய லாரி பறிமுதல்
வாணியம்பாடி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கொத்தூா் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையில் பறக்கும் படையினா் மணல், மண் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பச்சூா் டோல்கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில்அதிகாரிகள் நிறுத்தினா். ஆனால் ஓட்டுநா் சற்று தூரம் சென்று சாலை ஓரம் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினாா்.
அதிகாரிகள் லாரியில் சோதனை மேற்கொண்டதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து உதவி இயக்குநா் முத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.