Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங...
பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்
பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீா்ப்பு கிடைத்ததற்கு தானே காரணம் என்று பெருமை பேசுகிறாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி. உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதுதான் எடப்பாடி பழனிசாமி செய்த சாதனை.
அதிமுகவைச் சோ்ந்தவா்களுக்கு இந்த வழக்கில் தொடா்பு இருப்பதை அறிந்தவுடன், அவா்களைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் அளவில்லை, மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கணக்கில்லை! அப்போது, திமுகவும், இதர எதிா்க்கட்சிகளும் நடத்தியப் போராட்டங்களின் விளைவாகத்தான் வேறு வழியின்றி பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதை மக்கள் மறந்திருப்பாா்கள் என நினைத்துக்கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி.
இந்தத் தீா்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடும் போராட்டங்களும்தான் காரணம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவாா்கள்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை உயா்நீதிமன்றமே பாராட்டியது என்பதை அறிவாரா?. எடப்பாடி பழனிசாமியின் பதட்டத்துக்கு கொடநாடு கொலை வழக்குப் பற்றி முதல்வா் பேசியிருப்பதுதான் காரணம் என்று கூறியுள்ளாா்.