செய்திகள் :

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

post image

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.

சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் புதன்கிழமை பிற்பகல் 1.40 மணி அளவில் காலமானார்.

வெங்கடாசலத்தின் உடல், சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வெங்கடாசலத்தின் மனைவி பேபி சரோஜா, மகன்கள் திருப்புகழ், இறையன்பு, மகள்கள் பைங்கிளி, இன்சுவை. இவர்களில் மனைவி பேபி சரோஜா, மகள் பைங்கிளி ஆகியோர் காலமாகிவிட்டனர்.

மகன்கள் திருப்புகழ், இறையன்பு இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். வெ.இறையன்பு தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, தலைமைச் செயலராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார். மகள்கள் இருவரும் கல்லூரிப் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள்.

மறைந்த வெங்கடாசலத்தின் உடலுக்கு உறவினர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் சேலம் சுப்பிரமணிய நகர் சந்நிதி தெரு வீட்டில் வியாழக்கிழமை (மே 15) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 94440 34330.

முதல்வர் இரங்கல்: தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை வெங்கடாசலம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். சாமானிய பின்னணியில் இருந்து, தனது உழைப்பால் இரு மகன்களை இந்திய ஆட்சிப் பணியாளர்களாகவும், மகள்களைப் பேராசிரியர்களாகவும் உருவாக்கி சமூகத்துக்கு அளித்த பொறுப்புமிக்க தந்தை ஆவார்.

தமது பிள்ளைகளுக்கு தூய தமிழில் இனிமையான பெயர்களைச் சூட்டித் தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தி அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்.

அவரை இழந்து தவிக்கும் இறையன்பு, திருப்புகழ் உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க

பச்சைப்பயறு கொள்முதல்: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

பச்சைப்பயறு கொள்முதல் செய்வது தொடா்பாக, தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்ப... மேலும் பார்க்க