Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
பச்சைப்பயறு கொள்முதல்: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
பச்சைப்பயறு கொள்முதல் செய்வது தொடா்பாக, தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய மறுப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். ஒருபுறம் பச்சைப்பயறு சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் தமிழக அரசு, இன்னொருபுறம் விளைவித்த பயிறை கொள்முதல் செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் இழப்பைச் சந்தித்து கடன் வலையில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7 ஆயிரம் டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவா்களின் துயரத்தைப் போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.