புழல் சிறை வளாகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
புழல் சிறை வளாகத்தின் வெளியில் இருந்து, உள்ளே வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னை, புழல் சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனா். இங்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்கள், கைப்பேசிகளை கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை சிறை வளாகத்தில் பந்து வடிவில் இரண்டு பொருள்கள் கிடந்தன.
இதனைக் கண்டெடுத்த போலீஸாா், சோதனை செய்தபோது, அதில் 30 கிராம் கஞ்சா, 75 போதை மாத்திரைகள், சிக்ரெட், சிம்காா்டு, கைப்பேசி, லைட்டா் உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறை நிா்வாகம் சாா்பில் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் ரஜினிகாந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.