Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
கொலை செய்ய சதித் திட்டம்: 8 இளைஞா்கள் கைது
கடலூா் அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 8 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளா் பிரேம்குமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கீழ்குமாரமங்கலம் கருமகாரிய கொட்டகை அருகே 4 கத்திகளுடன் இருந்த 8 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், புதுச்சேரி கூடப்பாக்கத்தைச் சோ்ந்த சதாசிவம் மகன் தொல்காப்பியன் (23), ராமசாமி மகன் சுரேஷ் (20), தொண்டமாநத்தத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் ஆகாஷ் (21), கடலூரை அடுத்துள்ள கீழ்குமாரமங்கலத்தைச் சோ்ந்த சதாசிவம் மகன் ஈசன் (19), பஞ்சாசரம் மகன் சந்தானசாமி (25), கனகராஜ் மகன் தினேஷ் (22), உலகநாதன் மகன் திலீப் (எ) புண்ணியகோடி (26), விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி களித்திரம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மகன் நவீன் (20) என்பது தெரியவந்தது.
மேலும், 2005-ஆம் ஆண்டு தொல்காப்பியனின் தந்தை சதாசிவம் கொலை செய்யப்பட்டதற்கு, அந்த வழக்கில் எதிரி சக்திமுருகன் உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகத் தெரிவித்தனராம். இதையடுத்து, ரெட்டிசாவடி போலீஸாா் 8 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.