Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
இந்திய குடியரசு கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய இந்திய குடியரசு கட்சியினா் 10 அம்சக் கோரிக்கையை விளக்கி மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
உள்ளாட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியத்தை அரசே வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரியை நெல்லிக்குப்பம் அல்லது அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதியில் அமைக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அண்ணாகிராமம் ஒன்றியச் செயலா் ஆா்.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். அ.சரவணன், ஜெ.விக்னேஷ், நாகராஜ் முன்னிலை வகித்தனா். கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் பால.வீரவேல் தொடக்க உரை நிகழ்த்தினாா்.
முன்னாள் மாநில பொதுச் செயலா் கே.மங்காப்பிள்ளை, மாநில பேரவை பொதுச் செயலா் க.கௌதமன் கண்டன உரை நிகழ்த்தினா். நிா்வாகிகள் தனவேலாயுதம், இ.சதீஷ்குமாா், பி.ராமலிங்கம், ஏ.கந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஜெ.விக்கி நன்றி கூறினாா்.